யாழில் வெற்று கைகளால் நாக பாம்பினை பிடித்த குருக்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வெற்று கைகளால் நாக பாம்பினை பிடித்து, பாம்பினை காப்பாற்ற முயன்றவர் பாம்பு தீண்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புத்தூர், சிவன் கோவில் வீதியைச் சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் சர்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இரவு, இவரது வீட்டின் முற்றத்தில் காணப்பட்ட வலைகளுக்குள் நாக பாம்பு ஒன்று சிக்கி தவித்துக்கொண்டிருந்தது.
இதனை அவதானித்த அவர், வலைகளுக்குள் சிக்கி இருந்த நாக பாம்பினை வெற்று கைகளால் பிடித்து காப்பாற்ற முற்பட்ட வேளை பாம்பு அவரை தீண்டியுள்ளது.
அதனை அடுத்து , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார்