உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது.

அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 60 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நிதி புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

2023/2024 பரீட்சைகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளை கருத்திற் கொண்டு இந்த மாணவர்கள் தெரிவு, மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் முதல் நிகழ்ச்சித்திட்டமாக, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, வட மாகாண மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு 2025 ஜூன் 22 ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு பாராட்டப்படவுள்ளனர்.

இதேவேளை, ஏனைய மாகாணங்களிலும் விரைவில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )