ஜனாதிபதி ஜேர்மனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜேர்மனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அடுத்த மாதம் 10 ஆம் திகதி அவர் ஜேர்மனுக்கு பயணமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி முதலில் இந்தியாவிற்கும் அதனைத் தொடர்ந்து சீனாவிற்கும் விஜயம் மேற்கொண்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர், ஜனாதிபதியின் முதல் ஐரோப்பிய பயணமாக ஜேர்மனுக்கான உத்தியோகபூர்வ விஜயம் அமையும்.