மாலனி பொன்சேகாவின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல்

மாலனி பொன்சேகாவின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல்
சிங்கள சினிமாவின் புகழ்ப்பெற்ற நடிகை மறைந்த மாலனி பொன்சேகாவின் மறைவிற்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘இலங்கை சினிமாவின் தத்ரூபமான நடிகையாக திகழ்ந்த மாலினி பொன்சேகாவின் மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவரின் கருணை, திறமை பரம்பரை முழுவதும் தொடர்ந்தது. அவரின் பாரம்பரியம் எமது உள்ளத்திலும் திரையிலும் என்றும் மிளிர்கின்றது. அவரின் அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றேன். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும்”  எனவும் அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Share This