நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி நேற்று (17) இரவு நாட்டை வந்தடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியுடன் குழுவில் இணைந்து கொண்ட அமைச்சரவை அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த, விஜித ஹேரத் உள்ளிட்டவர்களும் நாடு திரும்பியுள்ளனர்.

நேற்றிரவு 10:00 மணியளவில், இந்தியாவின் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-196 ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயமாக இதுவாகும்.

இந்த வியஜத்தின் போது, அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியால் அரச மரியாதையுடன் வரவேற்று, பின்னர் நட்பு ரீதியாகவும், இராஜதந்திர ரீதியிலும் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது.

பொருளாதார உடன்படிக்கையாக கருதப்படும் எட்கா உடன்படிக்கைக்கு ஜனாதிபதியும் பிரதமர் மோடியுடன் இணக்கம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இதற்கு மேலதிகமாக இந்திய ஜனாதிபதி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய நிதியமைச்சர் மற்றும் இந்திய வர்த்தக முதலீட்டாளர்கள் குழுவினரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தித்திருந்தனர்.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This