ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
மூன்று நாள் அரச விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு இன்று காலை அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், மீனவர்கள் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்தும் இதன் போது பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இரு நாட்டு தலைவர்களின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு பிற்பகல் நடைபெற உள்ளது.