இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கிலோ மீற்றர் மேற்கே 89 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அண்மையில் மியான்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.