
வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மனித உடலில் உணரக்கூடிய வெப்பநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நீடிக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
CATEGORIES இலங்கை
