பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் பாதாள உலகத்திற்கு ஆதரவு – ஜனாதிபதி விசேட உரை

பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் பாதாள உலகத்திற்கு ஆதரவு – ஜனாதிபதி விசேட உரை

அரசியல் தலைவர்கள், பொலிஸார், பாதுகாப்பு மற்றும் ஏனைய அதிகாரிகள் உட்பட பல துறைகள் பாதாள உலகத்தை ஆதரித்து வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை விசேட உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

பாதாள உலகமும் சில துறைகளும் அரசைக் கட்டுப்படுத்தும் ஒரு வலையமைப்பை உருவாக்கியுள்ளன.

கடந்த காலத்தில் அனைத்து அரசாங்கங்களும் பாதாள உலக நபர்களால் கட்டுப்படுத்தப்பட்ட இந்த வலையமைப்பிற்கு அடிபணிந்தன, ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கள் அடிபணியப் போவதில்லை மாறாக சவால்களுக்கு முகங்கொடுக்கும்.

நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க தற்போதைய அரசாங்கம்  இடமளிக்கப்போவதில்லை.

அண்மைய காலங்களில் மாத்திரம் வெவ்வேறு பகுதிகளில் 06 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவங்கள் தொடர்பாக விரைவில் புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும். இருப்பினும், தகவல்களை நாங்கள் இப்போதே வெளியிட போவதில்லை. அவ்வப்போது தகவல்களை வெளியிடுவது சந்தேக நபர்கள் தப்பிக்க உதவும்” என்று ஜனாதிபதி கூறினார்

Share This