
யாழில் உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மணல் ஏற்றி உழவு இயந்திரத்தை மறிக்க முயன்றுள்ளனர்.
இதன்போது, உழவு இயந்திரத்தை இயக்கிய நபர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸார் மீது மோதிவிட்டுத்
தப்பிச் சென்றுள்ளார்.
இந்த மோதலில் பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,தப்பிச் சென்ற சாரதியைக் கைது செய்ய விஷேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
