சூரிய சக்தியில் இயங்கும் இலத்திரனியல் படகுகளை பயன்படுத்தி சுத்தம் செய்யப்படும் பேர வாவி

கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேர வாவியில் காணப்படும் கழிவுகளை அகற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சூரிய சக்தியில் இயங்கும் இலத்திரனியல் படகுகளை பயன்படுத்தி ஒரு நாளில் 3000 கிலோ கிராம் வரை கழிவகற்றல் இடம்பெறுகிறது.
உத்தேச திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் 04 படகுகளை பயன்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதனூடாக பேர வாவியின் நீரின் தன்மையை மேம்படுத்துவதுடன், சுற்றுச் சூழல் சமநிலையை பேணுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
அத்துடன் பேர வாவியை அண்மித்த வலயத்தின் இயற்கை அழகை பாதுகாப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.