
வவுனியாவில் சூறாவளி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வவுனியாவில் சூறாவளி காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இன்று காலை மினி சூறாவளிக் காற்று வீசியதுடன், பலத்த மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மின்தடையும் ஏற்பட்டுள்ளது.
வவுனியா நகரப் பகுதியில் இருந்த நடைபாதை விற்பனை நிலையங்கள் முழுதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ் நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
CATEGORIES இலங்கை
