ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை நாடளாவிய ரீதியில் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி

ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை நாடளாவிய ரீதியில் செயற்படுத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“குருநாகல் மற்றும் அனுராதபுரம் இடையே மாத்திரம் ஒன்லைன் அபராதம் செலுத்தும் முறை காணப்படுகிறது.
தற்போது அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் தொலைபேசி சாதனங்களை வழங்குகிறோம், இதனால் இந்த ஆண்டு முதல், போக்குவரத்து அபராதங்களை கையடக்க தொலைபேசி மூலம் எந்தவொரு இடத்திலிருந்தும் செலுத்த முடியும்.
அரசாங்கம் அபராதம் செலுத்தும் முறை எளிதாக்கியுள்ளது. அபராதம் செலுத்துவதற்குப் பதிலாக, அனைவரும் கவனமாக செயற்பட வேண்டும், சீட் பெல்ட்களை அணிவதை கவனத்திற்கொள்ள வேண்டும்” என்றார்.