நாடாளுமன்றத் தாக்குதல்…இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவு
2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த 5 பயங்கரவாதிகளால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 9 பேர்
சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கிடையில் சுமார் அரை மணித்தியாலம் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
பயங்கரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டதால், நாடாளுமன்றத்துக்குள் இருந்த மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நிகழவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இச் சம்பவம் நடைபெற்று இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்நிலையில் இச் சம்பவத்தின் 23 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, மாநிலங்களவை தலைவர், மக்களை சபாநாயகர் ஆகியோரால் அனுஷ்டிக்கப்பட்டது.
உயிரிழந்த 9 பாதுகாப்புப் படையினரின் புகைப்படங்களும் வைக்கப்பட்டது மலர் தூவி மரியாவை செலுத்தினர்.