இராணுவத்திலிருந்து வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்

பாகிஸ்தான் வீரர்கள் இராணுவத்திலிருந்து வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராணுவத்தைவிட்டு அதிரடியாக 1200 பாகிஸ்தான் வீரர்கள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் அச்சத்தில் பாகிஸ்தான் வீரர்கள் இராணுவத்தைவிட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாகிஸ்தான் இராணுவத்தின் உட்பூசல், நிதி தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக அவர்கள் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானும் பதிலடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கடும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் வீரர்கள் இராணுவத்திலிருந்து வெளியேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.