இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கடும் அதிருப்தி

இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் அணி தலைவர் சல்மான் ஆகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது மங்களுக்கு அவமரியாதை இல்லை என கூறிய அவர் அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் நிகழ்த்திய அவமரியாதை என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் தன்னுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கியதாகவும் கேமராவுக்கு முன்பு கைகுலுக்க மறுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளியில் இருந்து வந்த உத்தரவின்படி அவர் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ ஒரு குழந்தை இதைப் பார்த்தால், நாம் அவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அனுப்பவில்லை என சுட்டிக்காட்டிய அவர் மக்கள் தங்களை முன்மாதிரியாக நினைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஆசிய கிரிக்கெட் சபை தலைவரிடமிருந்தே கிண்ணத்தை வாங்குவது முறை எனவும் அதை அவரிடமிருந்து வாங்காமல், வேறு எப்படி பெற்றுக்கொள்வீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.