இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தமது வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை பாகிஸ்தான் ஒகஸ்ட் 24 ஆம் திகதி வரை நீட்டித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளும், அவர்களின் நிலைகளையும் இந்திய ராணுவம் அழித்தது.
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று இந்தியா அறிவித்தது. இந்தியாவின் செயல்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வெருகிறது.
இந் நிலையில் தமது நாட்டின் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.
இந்த தடை உத்தரவு, பயணிகள் மட்டுமல்லாது, சரக்கு விமானங்கள், இராணுவ விமானங்கள் மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில் இயக்கப்படும் விமானங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.