பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

சிறுபோக கொள்முதல் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை நெல் சந்தைப்படுத்தல் சபை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது.

அறுவடைப் பகுதியில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாக கொள்முதல் செயல்முறை தாமதமானதாக சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.

அறுவடை தற்போது நடைபெற்று வருவதால், பொலன்னறுவை முழுவதும் சுமார் 15 களஞ்சியசாலைகளில் நெல் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், நெல் சந்தைப்படுத்தல் சபையின் கீழ் சுமார் 300 நெல் களஞ்சியசாலைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடப்பு பருவத்தில் நாடு முழுவதும் மொத்தம் 13 ஆயிரத்து 100 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

Share This