மே மாதத்தின் முதல் 18 நாட்களில் 80,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 18 நாட்களில் 80,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 80,421 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.

இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 977,305 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரத் தகவல்களுக்கமைய, 184,095 பேர் இந்தியாவிலிருந்து வருகைத் தந்துள்ளனர்.

இந்தியாவுக்கு அடுத்த படியாக ரஷ்யாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.

இதன்படி, ரஷ்யாவிலிருந்து 109,675 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 92,539 பேரும் ஜேர்மனிலிருந்து 67,019 சுற்றுலாப் பயணிகளும் பிரான்ஸிலிருந்து 55,220 பேரும் வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This