பாடசாலைகளிலுள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான தரவுகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

பாடசாலைகளிலுள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான தரவுகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி கற்கும் கிராமப்புற பாடசாலைகளில் அதிகளவிலான ஆசிரியர்கள் இருப்பதாக
தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

சில பாடசாலைகளில் ஆசியிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நாட்டின் ஆசிரியர் ஆட்சேர்ப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என கல்வி பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஏற்ப நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும் என கல்வி பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This