ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்தையே அரசாங்கம் பின்பற்றுவதாக எதிர்கட்சி குற்றச்சாட்டு

ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்தையே அரசாங்கம் பின்பற்றுவதாக எதிர்கட்சி குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை எதிர்கொள்வதில் அனுபவம் இல்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்
சுஜீவ சேனசிங்க தெரவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த உண்மையை பேசுகிறார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பின்பற்றும் வேலைத்திட்டம் தொடரும் என்று லால்காந்த கூறியிருக்கிறார். ஆனால் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் உண்மையைக் கூறவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் விரைவில் முடிவுக்கு வரும். அந்த திட்டம் முடிவடைந்த பின்னர், தற்போதைய அரசாங்கத்திடம் கடன்களை அடைக்கும் முறை, வெளிநாடுகளை எவ்வாறு கையாள்வது, வரிச் சலுகைகளைப் பெறுவது போன்ற எந்த எதிர்காலத் திட்டங்களும் இல்லை” என்றார்.

Share This