ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் திறப்பு

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் திறப்பு

தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை வீழ்ச்சி காரணமாக சிறிய மற்றும் பாரியளவிலான 15 நீர்த்தேக்கங்கள் வான்பாய ஆரம்பித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனூடாக செக்கனுக்கு 5087 கன அடி நீர் வெளியேறுகிறது.

ராஜாங்கனை, சியம்பலாண்டுவ, தெதுருஓய, பத்தலகொட, யோத வாவி உள்ளிட்டவை வான்பாய ஆரம்பித்துள்ளன.

தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்வடையலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Share This