காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

வெல்லவாய, ரந்தெனிய, மதுருவா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த நபரை, சாலையில் நின்ற காட்டு யானை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டு யானை தாக்கியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் ரந்தெனியவைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார்.

சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This