பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

களுத்துறை, பண்டாரகம- கம்மன்பில குளத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி, மின்சார தூண் ஒன்றுடன் மோதி, சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
அந்துன்வென்ன பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காருக்கும், உயர் மின்னழுத்த தூணுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து, பண்டாரகமவில் பல பகுதிகளுக்கு மின்சாரம் தடைப்பட்ட நிலையில், மின்சார சபை ஊழியர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் அதை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தனர்.