கொச்சிக்கடை பகுதியில் ரயிலில் மோதி நபரொருவர் பலி

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுர்து மாவத்தை வீதியில் அமையப்பெற்றுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில், ரயிலில் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலிலேயே மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துடன், பின்னால் பயணித்த நபர் பலத்த காயமடைந்துள்ளார்.
அவர் நீர்கொழும்பு வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.