வவுனியாவில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

வவுனியாவில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான  குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (03).01 மாலை இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தில் அமைந்துள்ள கிணற்றை சுத்தப்படுத்தும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது நீர் இறைக்கும் இயந்திரத்திலிருந்து மின்கசிவு ஏற்பட்டமையால் குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அவர்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில்  45  வயதுடைய குடும்பஸ்த்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS
Share This