பிரித்தானியாவில் தொழில் புரிவோரில் ஐந்தில் ஒருவர் வேலையின்றி இருப்பதாக தகவல்

பிரித்தானியாவில் தொழில் புரிவோரில் ஐந்தில் ஒருவர் வேலையின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் ஓய்வூதியத் துறையால் நியமிக்கப்பட்ட சுயாதீன குழு தயாரித்த இந்த அறிக்கையில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
மேலும் ஐந்தில் ஒருவர் தொழில் தேடாமல் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தாவிட்டால் 2030 ஆம் ஆண்டுக்குள் மேலும் 06 இலட்சம் பேர் உடல்நலக் காரணங்களால்
தொழிலை விடக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோய்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் காரணமாக உற்பத்தித்திறன் குறைவதும், சம்பள இழப்புகளும் முதலாளிகளுக்கு ஆண்டுக்கு
85 பில்லியன் பவுண்ட்ஸ் செலவாகிறது என சுயாதீன வேலை மற்றும் சுகாதார ஆய்வு குழுவின் தலைவர் சார்லி மேஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை பரந்த பொருளாதாரத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
