பஸ்ஸொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி – மேலும் 10 பேர் வைத்தியசாலையில்

தெல்தோட்டை – கண்டி வீதியில் ஹால்வத்த பகுதியில் பஸ்ஸொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றின் மீதே மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது குறித்த பஸ்ஸில் பயணித்த மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
