ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா…மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பித்து இம் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் பல முக்கிய மதோக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இம் மசோதாவை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயராகி வருகிறது.
ஆனால், எதிர்க் கட்சியினர் இந்த முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது என கூறி வருகின்றனர்.
இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆய்வுகளை மேற்கொண்டு மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.