சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆமைகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆமைகளுடன் ஒருவர் கைது

கம்பஹாவின் யக்கல பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆறு ஆமைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் அவசர சோதனைப் பிரிவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளுடன் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டப்பட்டார்.

இதன்போது நீதவான் சந்தேக நபரை 500,000 ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஆமைகளை, ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக தேசிய விலங்கியல் பூங்காத் துறையிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

CATEGORIES
TAGS
Share This