பிரித்தானியாவில் தரவுகளை கசிய விட்ட அதிகாரி – வெளியானது பலரது இரகசிய தகவல்

பிரித்தானியாவில் தரவுகளை கசிய விட்ட அதிகாரி – வெளியானது பலரது இரகசிய தகவல்

பிரித்தானியாவில் அதிகாரி ஒருவர் தற்செயலாக தரவுகளை கசியவிட்டதால்  ஒரு இரகசிய திட்டத்தின் கீழ் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்காணோர் பிரித்தானியாவுக்கு வருகைத் தந்துள்ளமை தெரியவந்திருக்கிறது.

2022 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பிரித்தானியாவுக்கு செல்ல விண்ணப்பித்த சுமார் 19,000 பேரின் தனிப்பட்ட விபரங்கள் கசிந்திருக்கின்றன.

இரகசிய திட்டத்தின் கீழ் இதுவரை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4,500 பேர் பிரித்தானியாவுக்கு வருகைத்தந்துள்ளனர்.

ஆனால் அரசாங்கம் அதனை பொதுவெளியில் தவிர்க்க ஒரு தடை உத்தரவைப் பெற்ற பின்னர், கசிவு மற்றும் இடமாற்றங்களின் இருப்பை இரகசியமாக பேணியிருக்கிறது.

தடை உத்தரவை நீக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்த பின்னரே இந்த தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இந்த கசிவில் தலிபான்களால் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் பெயர்கள், தொடர்பு விபரங்கள் மற்றும் சில குடும்பத் தகவல்கள் காணப்படுகின்றன.

இந்த கசிவு பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள பெயரிடப்படாத அதிகாரி ஒருவரால் தவறுதலாக இடம்பெற்றதாக பிரித்தானிய அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் கசிவில் தங்கள் விபரங்கள் சேர்க்கப்பட்டவர்களிடம் பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி, மன்னிப்பு கோரியிருக்கிறார்.

 

 

Share This