நியூசிலாந்தின் துணைப் பிரதமர்  நாட்டிற்கு வருகை

நியூசிலாந்தின் துணைப் பிரதமர் நாட்டிற்கு வருகை

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் நாட்டிற்கு வருகைத்தரவுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை அவர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்
மேற்கொள்ளவுள்ளார்.

அவரது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் அவர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் பல தனியார் துறை மற்றும் ஊடக ஈடுபாடுகளையும் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவருடன் நியூசிலாந்தின் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மூவரும் வருகைத் தருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This