நுவரெலியா மாநகராட்சியும் தேசிய மக்கள் சக்தி வசம்

நுவரெலியா மாநகராட்சியும் தேசிய மக்கள் சக்தி வசம்

நுவரெலியா மாநகராட்சி மேயராக தேசிய மக்கள் சக்தியின் உபாலி வணிகசேகர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தேசிய மக்கள் சக்தி சார்பாக உபாலி வணிகசேகர, சுயேட்சை குழு சார்பாக அஹகம ராமநாயகலாகே அஜித் குமார ஆகியோர் போட்டியிட்டனர்.

திறந்த வாக்கெடுப்பில் 14 வாக்குகளை பெற்று சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட உபாலி வணிகசேகர தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சிவன்ஜோதி யோகராஜா சபையின் பிரதி மேயராக தெரிவுசெய்யப்பட்டார்.

 

CATEGORIES
TAGS
Share This