தாதியர்கள் நாளை மூன்று மணித்தியால பணிப்புறக்கணிப்பு

தாதியர்கள் நாளை மூன்று மணித்தியால பணிப்புறக்கணிப்பு

2025 வரவு செலவு திட்டத்தில், மேலதிக நேரக் கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (06) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாளை (06) காலை 10 மணி முதல் 3 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய இதனைத் தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதியினுள் சகல வைத்தியசாலைகளுக்கும் முன்பாக தங்களது சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த சமன் ரத்னப்பிரிய,

“வைத்தியர்களுடனான கலந்துரையாடலிலும் கூட அவர்கள் கோரிய கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக அறியமுடிகிறது.

எனவே, தங்களுக்கு நியாயமான கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, நாளைய தினம் 3 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்” என சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

Share This