
நுகேகொடை துப்பாக்கிச் சூடு – கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு
நுகேகொடை – கொஹூவல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து கொழும்பு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு 8:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 25 வயதுடைய ஒருவர் காயமடைந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்தே, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பு நகரம் முழுவதும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக நம்பப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பொது மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, அம்பலாங்கொட பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
