உடலில் வெளிப்புற இரத்தப்போக்கு இல்லை – கணேமுல்ல சஞ்சீவவின் தடயவியல் மருத்துவ அறிக்கை

அண்மையில் கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் உடலில் வெளிப்புற இரத்தப்போக்கு இல்லை என்றாலும், அவரது மார்பில் மூன்று தோட்டாக்கள் பாய்ந்ததால் ஏற்பட்ட உள் இரத்தப்போக்கு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக தடயவியல் மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
கொழும்பு தடயவியல் மருத்துவ அதிகாரி அலுவலகத்தில், இறந்தவரின் பிரேத பரிசோதனையை தடயவியல் மருத்துவ பரிசோதகர் திலங்கா பலல்ல கடந்த 20ஆம் திகதி மேற்கொண்டிருந்தார்.
இந்த பிரேத பரிசோதனையின் போது இறந்தவரின் உடலை அடையாளம் காண சஞ்சீவாவின் தாயார் மற்றும் மூத்த சகோதரி மட்டுமே உடனிருந்தனர், அதே நேரத்தில் அவரது மனைவி அங்கு வந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடயவியல் மருத்துவ அறிக்கையின்படி, இந்த துப்பாக்கிச் சூடு மிக அருகில் இருந்து நடத்தப்பட்டதற்கான அவதானிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவின்படி, இறந்த சஞ்சீவவின் உடல் பொரளை பகுதியில் உள்ள ஒரு தனியார் மலர்சாலையில் ஒப்படைக்கப்பட்டு, 21ஆம் திகதி மாலை அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.