ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பால் இன்றும் இரவு நேர தபால் ரயில் சேவைகள் ரத்து

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பால் இன்றும் இரவு நேர தபால் ரயில் சேவைகள் ரத்து

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்றிரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, 08 தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு – பதுளை, மட்டக்களப்பு – கொழும்பு, திருகோணமலை – கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் – கொழும்பு ஆகிய ரயில் சேவைகள்
இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று நள்ளிரவு
முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கோரிக்கைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய
பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This