
பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இடையே புதிய வர்த்தக உடன்படிக்கை
பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இடையே புதிய வர்த்தக உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பிரித்தானிய மருந்துப் பொருட்கள் மீது வரி (Zero Tariffs) அறவிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப், பரஸ்பர வரிகளை விதித்திருந்தார்.
இதனால், பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் மருத்துவப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருந்தது.
எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த புதிய உடன்படிக்கை இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவிற்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ‘பூஜ்ஜிய வரி’ சலுகையைப் பெறும் முதல் நாடு பிரித்தானியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு கைமாறாக, பிரித்தானியா அரசாங்கம் ஒரு பரஸ்பர நடவடிக்கையையும் அறிவித்துள்ளது
இதன்படி, தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு சிறப்பு நிறுவனம், தேசிய சுகாதார சேவை புதிய மருந்துகளை மதிப்பிட பயன்படுத்தப்படும் செலவு–திறன் அடிப்படை வரம்பை 25 வீதம் உயர்த்த ஒப்புக் கொண்டுள்ளது.
இதனால் புதிய மருந்துகள் தேசிய சுகாதார சேவை ஊடாக விரைவாக அனுமதி பெறும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
