
பிரித்தானியாவில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
இங்கிலாந்தில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் குப்பை சேகரிப்புக்கான புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றன.
இதன்படி, பல்வேறு வகையான கழிவுகளுக்காக நான்கு தனித்தனி குப்பைத் தொட்டிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இந்தப் புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதால் நாடு முழுவதும் உள்ள வீடுகளில் குறிப்பிட்ட பொருட்களைத் தவறான முறையில் குப்பைத் தொட்டிகளில் போட்டால் 400 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குப்பைத் தொட்டிகளைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் குடியிருப்பாளர்களை எச்சரித்து வருகின்றனர்.
புதிய கட்டாயக் கழிவு சேகரிப்பு முறை நாளை முதல் நடைமுறைக்கு வருவதால நாடு முழுவதும் உள்ள குப்பை சேகரிப்பாளர்கள் கழிவுகளைத் தனித்தனியாகச் சேகரிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, உணவு மற்றும் தோட்டக் கழிவுகள், காகிதம் மற்றும் அட்டை, உலர்ந்த மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள், மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் என்று வகைப்படுத்தப்பட்டு கழிவுகள் சேகரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
