யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு, குடியகல்வு அலுவலகம்

யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு, குடியகல்வு அலுவலகம்

யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு, குடியகல்வு அலுவலகம் எதிர்வரும் முதலாம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

வட மாகாண மக்கள் கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தும் வகையில் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது வவுனியா, மாத்தறை, குருநாகல் ஆகிய பகுதிகளில் குடிவரவு, குடியகல்வு அலுவலகங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This