ஜனாதிபதி அநுரவை வரவேற்க தயார் நிலையில் புது டில்லி
மூன்று நாள் அரச விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை வரவேற்க புது டில்லி தயாராகியுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் வெளிநாட்டு விஜயமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் இந்தியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியுடன் மூவர் கொண்ட தூதுக்குழுவொன்று நாட்டை விட்டுச் சென்றுள்ளது.
ஜனாதிபதி மற்றும் குழுவினர் இன்று (15) பிற்பகல் 02.08 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-195இல் இந்தியாவின் புதுடில்லிக்கு புறப்பட்டனர்.
ஜனாதிபதி எதிர்வரும் 17ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.