இந்தியாவில் திருத்தப்பட்ட புதிய வருமான வரி சட்டமூலம் நிறைவேற்றம்

இந்தியாவில் திருத்தப்பட்ட புதிய வருமான வரி சட்டமூலம் நிறைவேற்றம்

இந்தியாவில் திருத்தப்பட்ட புதிய வருமான வரி சட்டமூலம் மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமுலில் இருந்து வந்த 1961-ம் ஆண்டு வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு திட்டமிட்டது.

இதன்படி, பல சிக்கலான நடைமுறைகள் நீக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி சட்டமூலம் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ம் திகதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இதுகுறித்து ஆராய்வதற்கு பாஜக உறுப்பினர் பைஜயந்த் பாண்டா தலைமையில் தேர்வுக்கு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

CATEGORIES
TAGS
Share This