நோட்டிகா அதி சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

நோட்டிகா அதி சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

நோட்டிகா அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

தாய்லாந்திலிருந்து 614 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 397 பணியாளர்களுடன் இந்த கப்பல் வருகைதந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்தியாவிற்கு புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கப்பலில் பயணிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This