சூறாவளி, காட்டுத் தீ என கனடாவை புரட்டிப் போடும் இயற்கை சீற்றம்

கனடாவின் பல மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு வெப்பம், காற்றின் தரம் மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பம் மற்றும் இடியுடன் கூடிய மழை தொடர்பில் 191 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை நிலவரப்படி காற்றின் தரத்திற்கான 342 எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டிருந்ததாக கனேடிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒன்டாரியோ, கியூபெக், ஆல்பர்ட்டா, நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர் ஆகிய பகுதிகளுக்கு வெப்பமான வாநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்
கியூபெக் மற்றும் ஒன்டாரியோவிலும் புயல் எச்சரிக்கைகள் அமுலில் காணப்படுகின்றன.
மணிக்கு 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதுடன் இன்று மாலைக்குள் சூறாவளி ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இன்று பிற்பகல் பலத்த இடியுடன் கூடிய மழை, காற்று மற்றும் சூறாவளி மிகவும் வலிமையாக இருக்கும் என்பதால் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும்
இயற்ககை அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.