தேசிய துக்க தினம் பிரகடனம் – தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு அறிவிப்பு

தேசிய துக்க தினம் பிரகடனம் – தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு அறிவிப்பு

நித்திய இளைப்பாறிய திருத்தந்தை பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையை முன்னிட்டு இன்றைய தினம் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு பொது நிர்வாக அமைச்சு, அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக்கிரியை இன்று காலை 10:00 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் (St. Peter’s Square) நடைபெறவுள்ளது.

அவரது திருவுடல் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

88 வயதான திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த திங்கட்கிழமை(21.04) நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.

 

Share This