எக்ஸ் தளத்தை விற்பனை செய்த மஸ்க்

எக்ஸ் தளத்தை விற்பனை செய்த மஸ்க்

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை தனது சொந்த நிறுவனமான எக்ஸ் ஏ.ஐ. (xAI) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் முழுமையாக பங்கு பரிவர்த்தனை மூலம் நடைபெற்றுள்ளது.  இதன் மதிப்பு சுமார் 33 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இந்த ஒப்பந்தத்தை எலான் மஸ்க் நேற்று வெள்ளிக்கிழமை இரவு (28.03.25) தனது எகஸ் தளத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

அந்தப் பதிவில் அவர் தெரிவிதிருப்பதாவது,

“எக்ஸ் ஏ.ஐ. நிறுவனம் எக்ஸ் தளத்தை வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்தை 80 பில்லியன் டொலர்களாகவும், எக்ஸ் தளத்தை 33 பில்லியன் டொலர்களாகவும் மதிப்பிடுகிறது.

மேலும், எக்ஸ் மற்றும் எக்ஸ் ஏ.ஐ. ஆகியவற்றின் எதிர்காலம் ஒருங்கிணைந்துள்ளது. இந்த இணைப்பு, எக்ஸ் ஏ.ஐ.யின் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன்களை எக்ஸ் தளத்தின் பரந்த பயனர் தளத்துடன் இணைத்து, புதிய சாத்தியங்களைத் திறக்கும்” என மஸ்க் தெரிவித்துள்ளார்.

Share This