சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுவிப்பு

சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து அவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில், அந்த மாகாணத்தில் நடந்ததாகக் கூறப்படும் பிரதான 03 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாமர சம்பத் கைது செய்யப்பட்டார்.

அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிப்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் 50,000 ரூபாய் ரொக்க பிணையும் 05 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.
வெளிநாட்டிற்கு செல்ல சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு தடை விதிக்கப்பட்டதுடன் அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

 

 

Share This