கல்கிசை சம்பவம் – சட்டத்தரணியின் நடத்தை குறித்து அமைச்சர் ஆனந்த விஜேபால கவலை

கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணியின் நடத்தை குறித்து தான் மிகவும் கவலையடைவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அநாகரீகமான நடத்தை நீதிமன்றத்தை அவமதிப்பதாக கருதுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் நீதிமன்றத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்ட சட்டத்தரணி
மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்றும், இந்த விடயத்தில் சட்டமா அதிபர் தலையிட்டு அரசு சட்டத்தரணிரயை ஈடுபடுத்துவதன் மூலம்
தேவையான நடவடிக்கை எடுப்பார் என்றும் பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.