சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகத்தில் அதிகளவான வெற்றிடங்கள்

பொது சேவையில் தற்போதுள்ள வெற்றிடங்களில், அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகத்தில் காணப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இதன்படி, இவற்றில் 3,519 வெற்றிடங்கள் நிலவுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்தபடியாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் 3,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமைச்சுகள், மாகாண சபைகளில் காணப்படும் மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கை 7,456 என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.