கடந்த ஏழு நாட்களில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கைது

கடந்த ஏழு நாட்களில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கைது

நாட்டில் கடந்த ஏழு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் தொடர்புடைய 3,315 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒகஸ்ட் மாதம் 08ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இலங்கை முழுவதும் நடத்தப்பட்ட 3,321 சோதனைகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயின் வைத்திருந்த 1,014 பேரும், ஐஸ் ரக போதைப்பொருள் வைத்திருந்த 1,191 பேரும், ஹஷிஷ் ரக போதைப்பொருள் வைத்திருந்த 27 பேரும், கஞ்சா வைத்திருந்த 1,019 பேரும், கஞ்சா செடி வைத்திருந்த 17 பேரும், போதை மாத்திரைகள் வைத்திருந்த 38 பேரும், இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் 09 பேரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த சோதனைகளின் போது மொத்தம் 1.14 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின், 3.45 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் ரக போதைப்பொருள், 56 கிராமுக்கு மேற்பட்ட ஹஷிஷ் மற்றும் 565 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதா தெரிவிக்கப்படுகிறது.

Share This